திரு. சுப்பையா தியாகலிங்கம்
புங்குடுதீவு
Mr.S.Thiyagalingam
(Rtd.Civil Administration officer. Sri Lanka Air Force)

Mr.S.Thiyagalingam Born in Pungudutivu - 04 and lived Colombo passed away. He is Son of Suppiah Ponnachchi and Son in Law of Kandaiah Rasamma. Belowed husband of Umayabikai and Father of Mathivathanan and Arulchandran Thenmoli. Uncle of Aravindhi and Arulchandran. Loving grand father of Akshara, Sharini and Arunvarman. Brother of Rasalingam Mangayatkarasy, Late Kanagalingam, Panchalingam, Mahalingam.
Funeral will take place on 17/11/2011 at 11.00AM
At Mahinda Funeral Parlour, Galkissa
And cremation will take place at Galkissa cemetery at 2.00PM
புங்குடுதீவு 4ம்வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சுப்பையா தியாகலிங்கம் அவர்கள் 14-11-2011 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற திரு.சுப்பையா பொன்னாச்சி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும், உமையம்பிகையின் அருமைக் கணவரும், மதிவதனன், தேன்மொழி ஆகியோரின் பாசமிகு தந்தையும், அரவிந்தி, அருள்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும், அக்ஷரா, ஷரிணி, அருண்வர்மன் ஆகியோரின் ஆசைத்தாத்தாவும் காலஞ்சென்றவர்களான கனகலிங்கம், பஞ்சலிங்கம், மகாலிங்கம், மற்றும் மங்கையற்கரசியின் அன்புச் சகோதரனும், சிவபாதன், சிவகாமசுந்தரி, யோகாம்பிகை, காலஞ்சென்றவர்களான சிவயோகம், புவனேஸ்வரி, மீனலோசனி, இராசலிங்கம், சொர்ணலிங்கம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் 17-11-2011 காலை 10.30 மணியளவில் நடைபெற்று பின்னர் கல்கிசை இந்துமயானத்தில் அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும். உற்றார் உறவினர் நண்பர்கள் இத்தகவலை ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
+94112718528